வியாழன், 11 டிசம்பர், 2008

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் மகிந்த விரைவில் சந்திப்பு



சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளதார நெருக்கடி, தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் போர் நிலைமைகள் தொடர்பாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

போர் நடவடிக்கைகளினால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிகின்றனர். அனால், பொருளாதார நெருக்கடி இல்லை என அரசாங்கம் மறுக்கின்றது.

ஆகவே, இந்த நிலைமைகள் குறித்து விளக்கமளிப்பதற்கும் அபிவிருத்தி திட்டங்களுக்கான உதவிகளை கோருவதற்காகவுமே வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டடிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுதலாக சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கே அழைப்பு விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: