வெள்ளி, 10 ஏப்ரல், 2009

அப்பாவி மக்கள் மீது நச்சுவாயுவை வீசி கொல்லும் திட்டம் தயாராகிறது

அவசரமாக விடுதலைப்புலிகளின் வேவுப்பிரிவினர் இத்தகவலை அறிவித்திருக்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்கரையோர பிரதேசத்தில் எழு(07) குழிதோண்டும் (வைக்கோ இயந்திரம் நின்று பாரிய குழிகள் தோண்டப்படுகின்றது. அக்குழிகளில் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்ற அப்பாவி மக்கள் மீது இந்தியா கொடுத்த நச்சுவாயுவை வீசி கொண்றுவிட்டு இக்குழிகளி ல் போடும் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இப் பணியில் ஈடுபடுவதற்கென தென்பகுதியில் இருந்து ஊர்காவற்படையினர் அலம்பில் பிரதேசத்தில் வந்து நிலை கொண்டுள்ளனர். அவர்களிற்கு ஒவ்வொரு நாளும் காலை, மாலை முகமூடி(மாஸ்க்) அணிவிக்கப்பட்டு கடற்கரையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
இரவு வேளை வேவுப்பணியில் போராளிகள் ஈடுபட்டிருந்த போது அங்கு நின்ற ஊர்காவற்படையினரின் உரைகளில் இருந்து இத்தகவல் மேலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

இவ் கொடூரத்தை அரங்கேற்றுவதற்காகவே வன்னியில் சுமார் அறுபதினாயிரம் மக்கள் மட்டும் உள்ளனர் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. உண்மையில் முல்லைத்தீவு அரச அதிபரின் கணக்குப்படி வன்னியில் உள்ள மக்கள்; தொகை இரண்டு லட்சத்துக்கும் மேல் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.
எனவே உடனடியாக சர்வதேசசமூகமும், புலம்பெயர் தமிழர்களும், குறிப்பாக தழிழாக தலைவர்கள் இவ்விடயத்தில் ஒற்றுமையாக தலையிட்டு இங்கு நடக்கப்போகின்ற பாரிய மனித அவலத்தை தடுத்து நிறுத்துங்கள். இல்லையேல் ஒரு வரலாற்றுத் தமிழினம் பூண்டோடு அழிந்து விடும். இந்த நாகரிகமான புதிய நூற்றாண்டில் இப்படியொரு அவலம் தமிழனுக்கும், மனிதகுலத்திற்கும்.


தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எதிரிக்கு சந்தர்ப்பமாகவும், தழிழனுக்கு மரண இடியாகவும் அமையப்போகின்றது.

வியாழன், 2 ஏப்ரல், 2009

விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலில் 8 கிலோமீற்றர் வரையான காவலரண்கள் தாக்கியழிப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளால் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்குடியிருப்பின் கிழக்கு மற்றும் வடகிழக்கில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முன்னணி நிலைகளே விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

கடந்த ஞாயிறு இரவு இப்பகுதிகளுக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் பெட்டி வீயூகம் அமைந்து மறுநாள் திங்கட்கிழமை மதியம் வரை படையினர் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

பலமணி நேர மோதல்களின் பின்னர் சிறீலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகள் நோக்கி 500 மீற்றர் முன்னகர்ந்த விடுதலைப் புலிகள் பக்கவாட்டாக வலதுபுறம் 8 கிலோ மீற்றர் வரையான காவலரண்கணை தாக்கி அழித்து, குறித்த பிரதேசங்கள் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

ஊடறுப்புத் தாக்குதலை தளபதி கேணல் பாணு தலைமையில் விடுதலைப் புலிகளின் முன்னணி தாக்குதல் அணிகளுள் ஒன்றான சாள்ஸ் அன்ரணி படையணியே நடத்தியுள்ளது.

இந்த ஊடறுப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் பெருந்தொகையான படைக்கருவிகளையும் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறிலங்காப் படையினர் அங்கிருந்து தப்பியோடிபோதும் அவர்கள் மீது படைத் தளபதிகளின் உத்தரவுக்கமைய துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இதிலும் பல படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

புதன், 1 ஏப்ரல், 2009

புலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக சிங்களப்படை கடும் சமர்: முறியடிக்கப்பட்ட புதுக்குடியிருப்புச் சமரில் 1,412 படையினர் பலி; 6,123 பேர் காயம்


புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிழக்கு மற்றும் ஆனந்தபுரத்தில் சிறீலங்காப் படையினரின் பாரிய முற்றுகை நடவடிக்கை .

தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 7 நாட்களும் நடத்தப்பட்ட முறியடிப்புத் தாக்குதல்களில் 1,412 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6,123 படையினர்

படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அறிவித்துள்ளது.

வன்னியில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. அண்மைய நாட்களாக புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மற்றும் ஆனந்தபுரத்தில் இரு தரப்பினர் இடையே கடுமையான சமர் இடம்பெற்று வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வான் தாக்குதல்கள், எறிகைணத் தாக்குதல்கள், பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள், மோட்டார் தாக்குதல்கள், டாங்கித் தாக்குதல்கள், ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதல்கள் மற்றும் கனரக கனோன் ரகத் தூப்பாக்களின் சூட்டாதரவுடன் நாளாந்தம் சிறீலங்காப் படையினரால் முன்னெடுக்கப்படும் படை நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து வருகின்றனர்.

இரணைப்பாலையில் உள்ள செந்தூரன் சிலையடியை இரு தரப்பினரும் 10 அதிகமான தடவைகள் மாறி மாறி கைப்பற்றியுள்ளனர். இப்பகுதி ''ஸ்ரானின் கிராட்'' மாறியுள்ளதாக விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஒருவர் பதிவு இணையத்திடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:-

புதுக்குடியிருப்புப் பகுதியில் நாளாந்தம் நூற்றுக்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். மேலும் பல நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்து வருகின்றனர்.

இப்பகுதியில் யுத்தத்திற்காக களமிறக்கப்பபட்ட சிறீலங்காப் படையினரின் 57-வது படைப்பிரிவும், 58-வது படைப்பிரிவும் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ஆதரவாக 53-வது படைப்பிரிவையும் 55-வது படைப்பிரிவையும் சிறீலங்காப் படை அதிகாரி களமிறக்கியுள்ளனர். 57-வது, 58-வது படைப்பிரிவில் பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டுவிட்டனர்.

தற்பொழுது படையினருக்கு ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் காரணமாக களத்தில் நிற்கும் படைத் தளபதிகளுக்கும் கட்டளை மையத் தளபதிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்று வருக்கின்றது.

படையினரின் உளவுரண் பாதிக்கப்பட்ட நிலையில் நாளாந்தம் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது நாள் ஒன்றுக்குப் பல தடவைகள் வான்தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றது.

வன்னியில் இடம்பெற்று வரும் மோதல்கள் நெருங்கிய நேரடித் துப்பாக்கி மோதல்களாகவே மாறியுள்ளதால், சிறீலங்காப் படையினருக்கு பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் தென்னிலங்கையிலிருந்து சிறீலங்கா ஊர்காவல் படையினர் வரவழைக்கப்பட்டு படையினருடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

வன்னிக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தற்போது ஆவேசத்துடன் படையினருக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.