வியாழன், 11 டிசம்பர், 2008

அரசாங்கத்துக்கும் ரணில் கருவுக்கும் வெட்கமில்லை - ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கைகளை பலப்படுத்துகிறோமென இணைந்தவர்கள் இன்று கை நழுவிப் போயுள்ளனர். இது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான முதற்படியாகும். புதுடில்லிக்கு அரசாங்கம் உறுதியளித்த அதிகாரப் பரவலாக்கலையும், புலிகளுடனான யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கே இந்திய வெளியுறவத் துறை அமைச்சர் இங்கை வருகிறார் என ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.

பிட்டகோட்டையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த போதே ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்திற்கும் ரணிலுக்கும் கருவுக்கும் வெட்கமென்பது கிடையாது.

போனவர்கள் திரும்பி வருகிறார்கள். பதவிகள் வழங்கப்படுகின்றன. கட்டி அணைத்துக் கொள்கிறார்கள், இது தான் கொள்கையில்லா வெட்கக் கேடான அரசியல் என்பதாகும். அமெரிக்கா ஒரு போதும் தனக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுமென கனவில் கூட எதிர்பார்த்ததில்லை. அதேபோல் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் ""விழும்'' என்றும் கனவு கண்டதில்லை.

ஆனால் இன்று கரு ஜெயசூரியவின் வெளியேற்றத்துடன் அந்தக் கனவு கலைந்துவிட்டது. அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. கரு ""ஒழுக்கமானவர்'' என்ற மாயை மக்கள் மத்தியில் இருக்கின்றது. இதனால் அரசுடன் இணைந்த ஏனையோரும் எதிர்வரும் நாட்களில் வெளியேறலாம். அது மட்டுமல்ல சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களும் வெளியேறலாம்.

அரசாங்கத்தின் கைகளை பலப்படுத்தப் போகிறோமென இணைந்தவர் கை நழுவிப் போகும் நிலையில் அசந்து போயுள்ள அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்தாது சிறு சிறு தேர்தல்களை கட்டம் கட்டமாக நடத்தி மக்களின் பணத்தை வீண் விரயமாக்குகின்றது. விடுதலைப் புலிகளுக்கு சார்பாக தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது எமது ஜனாதிபதி இந்தியப் பிரதமருக்கு தொலைபேசி மூலம் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் இந்தியா அனுப்பவில்லை.மாறாக இலங்கையின் பிரதிநிதி இந்தியா சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தி இணை அறிக்கையும் வெளியிடப்பட்டது.அதில் 13 ஆவது திருத்தத்திற்கு மேலதிக அதிகாரத்தை பரவலாக்கவும் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதும் குறிப்பிடப்பட்டிருந்தது

கருத்துகள் இல்லை: