புதன், 10 டிசம்பர், 2008

நோர்வேஜியன் பீபல்ஸ் எயிட் இலங்கையிலிருந்து வெளியேறத் திட்டம்



நோர்வேஜியன் பீபல்ஸ் எயிட் தொண்டு நிறுவனம் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது..
எதிர்வரும் 2009ம் ஆண்டில் தமது அமைப்பு பூரணமாக வெளியேறும் என நிறுவனத்தின் பொதுச் செயலாளர் பீட்டர் எயிட் தெரிவித்துள்ளார்.

சுய விருப்பின் அடிப்படையில் இலங்கைப் பணிகளிலிருந்து விலகிக்கொள்ளத் தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோர்வேஜியன் பீபல்ஸ் எயிட் நிறுவனத்தின் பிரதான அபிவிருத்தித் திட்டம் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கில் சுமார் 640 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் நீர்வசதி மற்றும் சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், யுத்த பிரதேசங்களில் உள்ள பெருமளவு கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு பீபல்ஸ் எயிட் நிறுவனம் பங்களிப்பு

கருத்துகள் இல்லை: