வியாழன், 11 டிசம்பர், 2008

புதுமுறிப்பு நோக்கிய இருமுனை முன்நகர்வு முறியடிப்பு: 40 படையினர் பலி; 75 பேர் காயம்; 12 உடலங்கள் மீட்பு


வன்னிப் பகுதியில் சிறீலங்காப் படையினரின் இரு பெரும் முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 89 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 180க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். அத்துடன் சிறீலங்காப் படையினரின் உடலங்களும் படைக் கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.


கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதி ஊடாக கிளிநொச்சி நோக்கி இன்று புதன்கிழமை கலை 9:00 மணிக்கு சிறீலங்காப் படையினர் பெரும் எறிகணைச் சூட்டாதரவுடன் இரு முனைகளில் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.


இருமுனை முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 60 படையினர் கொல்லப்பட்டு மேலும் 120 படையினர் காயமடைந்துள்ளனர். இதன்போது சிறீலங்காப் படையினரின் 12 உடலங்களையும், படைக் கருவிகளையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.


விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத படையினர் அங்கிருந்து தப்பியோடி தமது நிலைகளுக்குச் சென்றுள்ளனர்.


பிகே எல்.எம்.ஜி - 02
ஆர்பிஜி உந்துகணை செலுத்தி - 02
ஏகே எல்.எம்.ஜி - 04
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 11
இரவு பார்வை காட்டி - 01
லோ - 01

ஆகிய படைக்கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சமநேரத்தில் முறிகண்டிக்கு மேற்கே உள்ள புலிக்குளம் எனுப் பகுதி ஊடாக கிளிநோக்கி இன்று புதன்கிழமை காலை 9:00 மணியளவில் கனரக ஆயுதங்களின் பெரும் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர்.


படையினரின் இந்த முன்னகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய 9 மணி நேர முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 60 படையினர் காயமடைந்துள்ளனர்.


விடுதலைப் புலிகளின் கடுமையான முறியடிப்புத் தாக்குதலை அடுத்து படையினருக்கு ஏற்பட்ட பேரும் சேதங்களால் படை நடவடிக்கையைக் கைவிட்டு பின்வாங்கி ஓடியுள்ளனர்.







இதேவேளை, கிளிநொச்சியின் தென் எல்லைப்பகுதியான முறிகண்டிக்கு வடமேற்கு பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்னகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது கொல்லப்பட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட சடலங்கள் யுத்த சூனிய பிரதேசங்களில் சிதறிக்கிடப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை: