புதன், 15 அக்டோபர், 2008

மும்முனை முன்னகர்வுகள் முறியடிப்பு: 62 படையினர் பலி! மேலும் பலர் காயம்



நேற்று செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணி முதல் கிளிநொச்சியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் தெருமுறுகண்டி - அக்கராயன்குள வீதியில் சிறீலங்காப் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர். படையினரின் முன்னகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலில் படையினர் தரப்பில் 26 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். படையினரின் மூன்று உடலங்களும், படைக் கருவிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன.

வன்னேரிக்குளம் நோக்கிய படையினரின் இன்னொரு முன்னகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழீழ விடுலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

வன்னிவேளாங்குளம் நோக்கிய படையினரின் மற்றொரு முன்னகர்வும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது படையினர் தரப்பில் 16 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

மூன்று முனைகளில் முன்னகர்வுகளில் ஈடுப்பட்ட படையினருக்கு ஆதரவாக எம்.ஜ 24 தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல்கள், மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் என சூட்டாதரவு வழங்கப்பட்ட போதும் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை அடுத்து முன்னகர்வுகள் அனைத்து கைவிடப்பட்டு, படையினர் தமது பழைய நிலைகளுக்குத் திரும்பியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: