வெள்ளி, 24 அக்டோபர், 2008

இலங்கையில் இனப்பிரச்சினை எதுவும் இல்லை – வெளிவிவகார அமைச்சர்



இலங்கையில் இனப்பிரச்சினை என்று எதுவும் இல்லை எனவும், பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே உள்ளதெனவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இனப்பிரச்சினை இல்லாவிட்டால் சர்வகட்சி குழு அமைத்து ஏன் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து ஆராயப்படுகிறது என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரச படையினர் முன்னெடுக்கும் யுத்தங்களின் போது மிக சொற்பளவிலேயே பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனிதாபிமான நிலைமைகள் குறித்து கவனம் செலுத்த அனைவருக்கும் உரிமையுண்டு, எனினும், எமது மக்கள் குறித்து நாம் அதிக கவனம் செலுத்துவோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுமார் 230,000 பொதுமக்கள் வன்னியில் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து குரல்கொடுத்து வருகின்றன.

கருத்துகள் இல்லை: