| இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை எனவும், குறித்த கைதிகள் மீது பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் கைதிகள் சித்திரவதை குறித்த விசேட பிரதிநிதி மென்பொர்ட் நொவிச் தெரிவித்துள்ளார். |
| இலங்கை, பரகுவே, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள நபர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மிகச் சிறிய அறைகளில் பெருந்தொகையான கைதிகள் தடுத்து வைக்கப்படுவதன் மூலம் அவர்களர் அடிப்படை உரிமை மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக கைதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து இலங்கை போன்ற நாடுகளில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உணவு, குடிநீர் மற்றும் சமூக பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை என நொவிச் தெரிவித்துள்ளார். சட்ட மற்றும் பொலிஸ் நிலையங்களில் காணப்படும் ஊழல் மோசடிகள் இந்த நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். |
செவ்வாய், 28 அக்டோபர், 2008
இலங்கையில் சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை – ஐ.நா. பிரதிநிதி மென்பொர்ட் நொவிச்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக