வெள்ளி, 17 அக்டோபர், 2008

வடபகுதி மோதல்களை நிறுத்த சிவாஜிலிங்கமே தமிழக அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுத்தார் - சிங்கள ஊடகம்:

வடபகுதி மோதல்களை நிறுத்துவதற்காக, தமிழக அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நடவடிக்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமே மேற்கொண்டதாக அறிய முடிகிறதென சிங்ளடகம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது சென்னையில் தங்கிருக்கும் சிவாஜிலிங்கம், அண்மையில் தமிழகத்தின் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களான வைகோ, ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்து, இலங்கையின் வடக்கு தனிநாடாக வேண்டும் என கூறுமாறு கேட்டுள்ளதுடன், பெரியார் திராவிட கழகத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி உள்ளார். அத்துடன் சிவாஜிலிங்கம் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரையும் சந்தித்துள்ளதாக இலங்கையின் புலனாய்வுதுறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் வன்னி மோதல்களை நிறுத்துமாறு இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதற்கு முன்னர், சிவாஜிலிங்கம், இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வன்னி மோதல்களை நிறுத்தி, போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துமாறு கேட்டிருந்தார் எனவும் அந்த சிங்கள நாளிதழ் கூறியுள்ளது.

நன்றி : உலக்தமிழச் செய்தி

கருத்துகள் இல்லை: