 | | | மலேசியாவில் ஹிண்ட்ராப் அமைப்புக்கு தடை |
மலேசியாவில் வாழும் சிறுபான்மை இந்திய வம்சாவளிகளுக்கு அதிக உரிமைகள் வேண்டும் என்று கோரி போராடி வரும் ஹிண்ட்ராப் அமைப்பை மலேசிய அரசு தடை செய்துள்ளது. ஹிண்ட்ராப் எனப்படும் இந்து மக்கள் உரிமை நடவடிக்கை குழு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக உள்துறை கூறியுள்ளது. மலேசியாவில் வாழும் இருபது லட்சம் இந்திய வம்சாவளிகளுக்கு வேலைகளிலும், கல்வி வாய்ப்புகளிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து ஹீண்ட்ராப் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது. மலேசியாவின், உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஹிண்ட்டிராப் அமைப்பின் 5 தலைவர்கள் காலவரையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரலாறு காணாத பெருமளவிலான மக்கள் பங்கேற்ற எதிர்புப்பு போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்ட இந்திய வம்சாவளியினர் காவல் துறையுடன் மோதியும் உள்ளனர். உலக பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆராய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கூட்டம்  | | | பிரிட்டிஷ் பிரதமரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் | உலக பொருளாதார நெருக்கடிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில் நடவடிக்கை குறித்து ஆராய, ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளின் தலைவர்கள் பிரஸ்ஸல்சில் சந்திக்கிறார்கள். நெருக்கடியில் சிக்கித் திணறிக்கொண்டிருக்கும் வங்கிகளுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பல நூறு பிலியன் டாலர்கள் பணத்தை தந்து ஆதரவு தரும் திட்டம் ஒன்றைப் பற்றி இந்த உச்சி மாநாடு கவனம் செலுத்தும். இதே போன்ற ஒரு திட்டத்தை பிரிட்டனும், யூரோவை பொது நாணயமாக பயன்படுத்தும் நாடுகளும் ஏற்கனவே இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. சர்வதேச நாணய நிதியம்,ஐ.எம்.எப். அமைப்புக்கு ஆற்றவேண்டிய ஒரு புதிய பணி, பங்கு பற்றியும் பிரிட்டனும் ஜெர்மனியும், பிரேரித்துள்ளன. இது போன்ற ஒரு நெருக்கடி மீண்டும் வராமல் தடுக்க முயல, உலகப்பொருளாதாரத்துக்கு ஐ.எம்.எப் முன்கூட்டியே எச்சரிக்கை தரும் அமைப்பு ஒன்றையும் இந்ததிட்டம் உள்ளடக்கவேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் கூறினார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக