செவ்வாய், 21 அக்டோபர், 2008

ஒலிக்கும் குரல் சிங்கள அதிபர் ராஜபகஸவுக்கு மரண ஓலமாக கேட்கட்டும் - இயக்குனர் அமீர்


இந்த மேடையில் ஒலிக்கும் குரல் சிங்கள அதிபர் ராஜபகஸவுக்கு மரண ஓலமாக கேட்கட்டும். அங்குள்ள தமிழர்களுக்கு நிம்மதி அளிக்கட்டும். என இயக்குனர் அமீர் தெரிவித்தார்.30 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தில் தொடர்ந்து வெடிசத்தம் கேட்கிறது. அங்கிருந்து பல வெளிநாடுகளுக்கு தமிழர்கள் அகதிகளாக செல்கிறார்கள்.

ஈழத் தமிழர்களின் பிரச்சினை இந்துக்களின் பிரச்சினை, முஸ்லிம்களின் பிரச்சினை, கிறிஸ்தவர்களின் பிரச்சினை என்று பேதம் பிரித்து பார்க்காமல் அனைவரும் இதற்கு ஆதரவாக வரவேண்டும். நமது எதிரி நாடான பாகிஸ்தான்கூட நமது மீனவர்களை சுட்டுக் கொல்வது இல்லை.

ஆனால் சிங்கள இராணுவம் அங்கு வாழ்ந்த ஒரு லட்சம் தமிழர்களையும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கொன்று உள்ளது.தமிழ்நாட்டில் இருந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டும். ஆனால் தமிழர்கள் வேண்டாமா? நம்மிடம் குரல் கொடுத்து பேசும் தலைவர்களே இல்லை.

வாருங்கள் என்றால் யாரும் வருவதும் இல்லை. ஒரு பிரச்சினை தொடர்பாக கூட்டப்படும் கூட்டத்தில்கூட சிலர் அழைத்தாலும் வருவதில்லை. ஒரு மாநில முதல்-அமைச்சர் அழைத்தாலும்கூட அவர்கள் அதனை ஏற்பது இல்லை. எவ்வளவு காலம் இப்படி ஏமாற்ற முடியும்? அவர்களை திட்டி பிரயோஜனம் இல்லை. எங்களை ஆளும் நீங்கள் அதனை சரி செய்யுங்கள்.

உங்களால்தான் கேட்க முடியும். சிறி லங்காவை இந்தியாவுடன் சேர்ப்பதாக அரசு அறிவித்தால் உலகம் இந்த பிரச்சினையில் தலையிடும்.. அதன்பின் உரிய தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: