செவ்வாய், 21 அக்டோபர், 2008

விடுதலைப்புலிகள் ஒன்றும் பலம் இழந்துவிடவில்லை - பெ.சந்திரசேகரன்




எமக்கு தெரிந்த விடயங்களின்படி விடுதலைப்புலிகள் ஒன்றும் பலம் இழந்துவிடவில்லை. அவர்கள் தங்களது பலத்தை தக்கவைத்தக்கொள்ள பலவித வியூகங்களை எற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் நாளேடான தினமலருக்கு அவர் வழங்கிருந்த செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றவுள்ளதாக சொல்லிக்கொள்வதன்மூலமோ, அல்லது கிளிநொச்சியை கைப்பற்றுவதன்மூலமோ அமைதி திரும்பிவிடாது.

தற்போது அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஆகிய நாடு;களிடமிருந்து சில மாதங்களாக சிறி லங்கா அரசாங்கம் கணிசமான பொருளாதார ஆயுத உதவிகளை பெற்றுவருகின்றது. இந்த உதவிகளை வைத்துக்கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்துவிடலாம் என்ற முழுமையான நம்பிக்கையில் அது உள்ளது.மேற்படி நாட்டினர்களின் உதவியுடன் சில இடங்களில் வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்திவருகின்றது.

தமிழீழ விடுதலைப்புலிகளிடமிருந்து பரிந்துசென்று இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும், கருணா குழு, பிள்ளையான்குழு போன்ற குழுக்கள் அரசாங்கத்திற்கு தாக்குதல்களுக்கு உதவிகளை புரிந்துவருகின்றன.இன்றைய நிலையின் உண்மை நிலைமைகளை புரிந்துகொண்டு தமிழ்நாட்டின் குரலுக்கு செவிசாய்க்காது சிறி லங்காவுக்கு உதவிகளை புரிந்தால், இந்தியா மீண்டும் ஒருமுறை மாபெரும் வராலற்றுத்தவறை புரிந்தது என்ற வரலாறு ஆகிவிடும் எனவும் அவர் அந்தச்செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: