புதன், 15 அக்டோபர், 2008

மகிந்தவுக்கு ஏழரை ஆரம்பம்.



புலிகளினி அழிந்தாரென்ற
கிழவன் செத்தும்
புலிதன் வீரம் மாறாமல்
வீச்சோடு மீண்டு எழ
மீளவும் புலிகளொடு போராட
புத்த புதல்வர்கள்.

போராடிப் போராடி
புலிகளிடம் தோற்றவர்கள்
ஈடாடி இயங்க முடியாமல்
ஊரெல்லாம் ஒப்பாரி வைச்சு
பாரெல்லாம் பழுதென்று
பதுக்கின ஆயுதங்கள்
தாவென்று வாங்கி
தம் பலம் இழந்தவர்கள்.

கிளிநொச்சி வீழ்ந்திடுமாம்
கொடியேற்றிக் குத்தியனை
முதலமைச்சராக்கும் கனவோடு
மகிந்த மாத்தையா உதயநாணயக்கார
கனவுகளில் மண்.

மாவீரர் மாதம் நெருங்கும்
ஐப்பசியில் மகிந்தவுக்கு
அட்டமத்தில சனி.
சனி பிடிச்சா ஏழாண்டு உலைச்சல்
இது சாத்திரம் சொல்லும் விதி.
மகிந்தவுக்கும் ஏழரை
மாத்த முடியா விதி.

மடு , இலுப்பைக்கடவை தொடர்
மாவிலாறென்ற நினைவு மகிந்தவுக்கு
சாவிலேறும் படைகளுக்கு
கிளிநொச்சிதான் சுடலை நிலம்
சனியன் ஆரம்பம்.

நன்றி :பதிவு

கருத்துகள் இல்லை: