புதன், 15 அக்டோபர், 2008

இழுபறியில் 'ஆயிரத்தில் ஒருவன்'!




Reemasen

ரவீந்திரன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் மீண்டும் இடியாப்பச் சிக்கலில் தவிக்கிறது.

முதல் பிரதி அடிப்படையில் தயாராகும் இந்தப் படத்துக்கு ரூ. 7 கோடி செலவாகும் என முதலில் நிர்ணயித்தார்கள். பிறகு மேலும் ரூ. 6 கோடி அதிகம் தேவைப்படும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவிக்க அதற்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார், ரவீந்திரன்.

எல்லாம் போக இப்போது ரூ.18 கோடியில் வந்து நிற்கிறது பட்ஜெட். இந்தத் தொகையைக் கொடுத்தால்தான் படப்பிடிப்பு முடியும் என செல்வராகவன் கூறவும் பிரச்சினை, தயாரிப்பாளர் சங்கத்தில் வந்து நின்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டு பணத்தைத் தர ஒப்புக் கொண்டார், ரவீந்திரன்.

இப்போது மேலும் ரூ. 3 கோடி கேட்கிறாராம் செல்வராகவன். மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போக முடிவெடுத்திருக்கிறார் ரவீந்திரன்.

பருத்தி வீரன் படத்துக்குப் பிறகு கார்த்தியும், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ரீமா சென்னும் நடிக்கும் படம் இது. தீபாவளிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

பொங்கலுக்காவது வருமா... பார்க்கலாம்!

கருத்துகள் இல்லை: