திங்கள், 13 அக்டோபர், 2008

எப்.எம்மில் ஏகன் ரிலீஸ்!




சமீபகாலமாக எப்எம் ரேடியோக்களால் தயாரிப்பாளர்கள் நொந்து போயுள்ளனர். காரணம், புதிதாக திரைக்கு வரும் படங்களின் பாடல்களை காது கிழியும் வரை போட்டு போரடித்து விடுவதால் ஆடியோ சேல்ஸ் ஊத்திக் கொள்கிறது.

ஆனால் இதையே தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது ஏகன். தல அஜித்-நயன்தாரா ஜோடியின் நடிப்பில் தீபாவளி ரேஸில் கலந்து கொள்கிறது ஏகன் படம்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு ஹலோ எப்எம் ரேடியோ அலுவலத்தில் வெற்றிகரமாக வித்தியாசமாக நடந்தது. படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆடியோவை வெளியிட, ஹலோ எப்எம்-ன் சிஓஓ ராஜீவ் நம்பியார் பெற்றுக் கொண்டார்.

பின்னர் யுவன் கூறுகையில், அஜீத்துடன் பணியாற்றிவது எப்போதுமே எனக்கு சந்தோஷம்தான். இது நான் பணியாற்றிய அஜீத்தின் மூன்றாவது படம். படத்துக்கு தேவையான அளவுக்கு பணியாற்றியுள்ளேன். தீனா, பில்லா படங்களும் வெற்றி பெற்றன.

ஏகன் படத்துக்காக 3 பெப்பி பாடல்களும், 2 மெலடிகளும் அமைத்துள்ளேன். அஜீத் அறிமுகமாகும் சால பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.

எப்எம் ரேடியோவில் ஆடியோ ரிலீஸ் என்பது புதுமையாக உள்ளது. இடையில் என்த தடங்கும் இல்லாமல் இசை பிரியர்களை இந்த பாடல்கள் சென்று சேரும் என்றார் ராஜீவ் நம்பியார்.

ரிலீஸான முதல் நாளிலேயே 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிடிக்கள் விற்று சாதனை படைத்துள்ளதாம் ஏகன்.

ஏகனுக்கு இது வித்தியாசமான அறிமுகம்தான்...

கருத்துகள் இல்லை: