திங்கள், 13 அக்டோபர், 2008
விடுதலைப்புலிகளை தோல்வியில் இருந்து காப்பற்றும் முயற்சியில் ஐ.தே.க – சிங்கள ஊடகம் கூறுகிறது:
விடுதலைப்புலிகள் அமைப்பை தோல்வியில் இருந்து காப்பற்றும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இலங்கை கிடைக்கும் உதவிகளை நிறுத்தும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினரும்- புலிகளின் ஆதரவாளர்களும் இத்தாலியில் மேற்கொண்ட சூழ்ச்சி தொடர்பான தகவல்கள் வெளியாகி இருப்பதாக அரசாங்கத்தின் சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இத்தாலியில் வாழும் இலங்கையர்கள், அங்கு இயங்கும் சிங்கள தொலைக்காட்சி ஆகியவற்றின் உதவியுடன் இந்த சூழ்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு நடவடிக்கையாக மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவின் கொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோரி கத்தோலிக்க குருமார் ஊடாக பாப்பரசருக்கு மகஜர் வழங்கப்படவிருந்தது.
தோல்வியடைந்து வரும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான முனைப்புகளில், ஐக்கிய தேசிய கட்சியினரும், இத்தாலியில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டிற்கு சமாதானத்தை கொண்டு வர ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினர் வழங்கி வரும் ஆதரவை நிறுத்தவும், இலங்கை அரசாங்கத்தை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையில் இந்த குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரச சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக