திங்கள், 13 அக்டோபர், 2008
தற்கொலை குண்டுதாரியின் படத்தை காண்பித்து தேடுதல் நடத்திய காவல்துறையினர்
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள வெள்ளவத்தை பகுதியில் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கும் பெண்ணொருவரின் படத்தை காண்பித்து காவல்துறையினர் தேடுதல் நடத்தினர்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பயணம் செய்த வாகனத் தொடரணி மீது தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி எனக்கூறப்படும் பெண்ணின் படத்தை காண்பித்தே வெள்ளவத்தை காவல்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை நடத்தியதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளவத்தையில் உள்ள வீடுகள், தொடர்மாடிகள் ஆகியவற்றிற்கு சென்ற காவல்துறையினர் மக்களிடம் குறித்த பெண்ணின் படத்தை மாத்திரம் காண்பித்து இவரை தெரியுமா எனக்கேட்டுள்ளனர்.
கறுப்பு- வெள்ளை படம் ஒன்றே காண்பிக்கப்பட்டதாகவும் அந்த படம் அச்சுப்பிரதி செய்யப்பட்டிருந்தது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை வெள்ளவத்தை காலி வீதி, கடற்கரை வீதி மற்றும் உட்புற வீதிகளில் போவோர் வருவோரை வழிமறித்த படையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பத்து இளைஞர்களை கைது செய்த படையினர் வெள்ளவத்தை காவல்துறை நிலையத்தில் அவர்களை ஒப்படைத்தனர். நேற்று அதிகாலை 5:00 மணிமுதல் நண்பகல் வரை சோதனை நடவடிக்கை இடம்பெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக