திங்கள், 13 அக்டோபர், 2008

களுவாஞ்சிக்குடியில் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொலை



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த இருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ளுவாஞ்சிக்குடி எருவில் பகுதியில் உள்ள மதுபானச்சாலை ஒன்றின் மேல் மாடியில் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை 6:15 நிமிடமளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

துணை இராணுவக்குழுவைச் சேர்ந்த இருவர் அங்கிருந்த போது உந்துருளியில் வந்த இருவர் மேல்மாடிக்குச் சென்று இருவர் மீதும் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், அந்த இகுழுவின் களுவாஞ்சிக்குடிப் பகுதியின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளரான தர்மலிங்கம் அருணகிரி (வயது 27) என்பவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த திருச்செல்வம் இராஜேந்திரன் (வயது 18) என்பவர் களுவாஞ்சிக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போது அங்கு உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: