திங்கள், 13 அக்டோபர், 2008
பொலிஸ் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி - பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை
பொலிஸ் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், இது குறித்து விளக்கமளிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கணக்காய்வாளர் நாயகம் கோரியுள்ளார்.
யுத்தம் என்ற போர்வையில் அரச நிறுவனங்களில் மிகப் பாரியளவில் மக்களின் சொத்துக்கள் சுரண்டப்படுவதாகப் பிரபல சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களப் பாவனைக்காகக் கொள்வனவு செய்யபட்ட பொருட்களுக்குப் பெறுமதியைவிட பன்மடங்கு செலவிடப்பட்டுள்ளதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
875 ரூபா பெறுமதியுடைய கத்தியொன்று 10,500 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. சுமார் 20 ரூபா பெறுமதியான சிரட்டை அகப்பை 200 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சாதாரண உத்தியோகத்தர் வரையில் இந்த மோசடிகளுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சில் பதிவு செய்யப்படாத விநியோகத்தர்களிடமிருந்து மோசடியான முறையில் பொலிஸ் திணைக்கத்திற்குப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக