| வன்னி மக்களைப் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கும் இராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் அரசபடையினர் மீது அண்மையில் புலிகள் இயக்கத்தினர் சில தடவைகள் குறிப்பிட்டதொரு இரசாயன வாயுவைப் பிரயோகித்து தாக்குதல் நடாத்தியிருந்தனர். எவ்வாறாயினும் புலிகளால் இரசாயன வாயுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அதனை சுவாசிப்பதால் ஏற்படக் கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக அவ்வாறான இரசாயன வாயுத் தாக்கத்தைத் தடுக்கும் விசேட முகமூடிகளை தற்போது அரசபடையினர் அணிந்துகொண்டு தமது இராணுவ நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாகவும் புலிகள் இயக்கத்தினரின் இத்தகைய வாயுத்தாக்குதல்கள் காரணமாக திட்டமிடப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகள் பின்தங்கிவிடவில்லை எனவும் சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து தீவிர தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் இராணுவத்தினர் தற்போது கிளிநொச்சியை அடைவதற்கு மிகக் குறுகிய தூரமே உள்ளது. இந்த வகையில் கடந்த வாரம் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கிளிநொச்சியை அடுத்துள்ள தரம்பைக்குளம் வடக்குபிரதேசத்திலிருந்தும் பின்வாங்கித் தப்பியோடிவிட்டனர். இதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தை கடந்த 4 ஆம் திகதி முற்று முழுதாகக் கைப்பற்றியிருக்கும் இராணுவத்தினர் புலிகள் நிலைகொண்டிருந்த காட்டுப் பகுதி நிலையங்களைச் சோதனையிட்ட போது அங்கிருந்து இரசாயன வாயுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளதாக இராணுவத் தரப்பில் மேற்படி சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். அரச படையினர் மீது அண்மையில் முதன் முதலாக புலிகள் இயக்கத் தீவிரவாதிகள் வாயுத்தாக்குதலை நடத்தியபின்னர் குறித்த அந்த இரசாயன வாயுபற்றியும் மற்றும் அதனால் படையினர் சிலருக்கு ஏற்பட்ட தாக்கங்க்ள் பற்றியும் இராணுவப் பகுப்பாய்வுப் பிரிவினர் மற்றும் அரச இரசாயணப் பகுப்பாய்வுத் திணைக்களம் மற்றும் ஆய்வாளர்கள் மேற்கொண்ட சோதனைகளிலிருந்து சீ.எஸ்.எனப்படும் இரசாயன வாயுவையே புலிகள் இயக்கத்தினர் பயன்படுத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அந்த வாயுக் கலன்களை புலிகள் இயக்கத்தினர் எத்தகைய ஆயுதத்தில் பொருத்தி ஏவினர் என்பதுபற்றி தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை. ஆயினும் தற்போது கடந்த 4 ஆம் திகதி கிளிநொச்சிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் கைப்பற்றியிருக்கும் தரம்பைக்குளம் வடக்குப் பகுதியில் புலிகள் தங்கியிருந்த முகாம்களிலிருந்து மேற்படி சீ.எஸ். இரசாயன வாயுவை ஏவப் புலிகள் பயன்படுத்திய விசேட துப்பாக்கியையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர். அரசபடையின் தீவிர தாக்குதலுக்கு முகம் கொடுக்கமுடியாமல் அவசரம் அவசரமாக அங்கிருந்து தப்பியோடியபோதே மேற்படி இரசாயன வாயு சுடுகலனையும் புலிகள் விட்டுச் சென்றுள்ளதாக குறித்த இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் மேற்படி சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர் கூறியுள்ளார். தொடர்ந்து புலிகளின் தரம்பைக்குளம் வடக்கு முகாமில் கைப்பற்றப்பட்ட இரசாயனவாயு ஆயுதத்தைப் பரிசோதித்த இராணுவ ஆயுத சோதனைப் பிரிவினர் தெரிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப குறிப்பிட்ட வாயு ஏவல் துப்பாக்கியில் பதிக்கப்பட்டிருக்கும் தகவல்களிலிருந்து அது ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதம் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு இரசாயன வாயுவை ஏவும் ஆயுதத்தை புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் விட்டுச் சென்றிருப்பதால் அவர்களிடம் அதன் மூலம் ஏவக்கூடிய சீ.எஸ். இரசாயன வாயுக் கலன்கள் இல்லையென்பதை உறுதிசெய்ய முடியும். மேலும் இவ்வாறு புலிகள் இயக்கத்தினர் தப்பியோடுவதற்கு முன்னரே இவ்வாறு சீ.எஸ். வாயுவை ஏவி அரசபடையினரின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்திவிட்டு தப்பியோடுவதாக கருத முடியும். அண்மையில் புலிகள் இயக்கத்தினர் சீ.எஸ். இரசாயன வாயுவை ஏவிய சம்பவம் அரசபடையினருடனான யுத்தத்தில் புலிகள் முதன் முதலாக குறிப்பிட்டதொரு இரசாயனவாயுத் தாக்குதல் நடத்திய முதலாவது சந்தர்ப்பமாகும். லங்காதீப:6/10/2008 |
வெள்ளி, 10 அக்டோபர், 2008
இரசாயனத் தாக்குதலுக்கு புலிகள் பயன்படுத்திய ரஷ்ய ஆயுதம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக