வெள்ளி, 10 அக்டோபர், 2008

ஜானக பெரேராவை தாக்கிய குண்டுதாரியை அடையாளம் கண்டிருப்பதாக பொலிஸார் தெரிவிப்பு
















மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய குண்டுதாரியை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை காலை அநுராதபுரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழாவில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29 பேர் கொல்லப்பட்டதுடன் 86 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில் திறப்பு விழா நிகழ்ச்சியை வீடியோ படமெடுத்துக் கொண்டிருந்த "சிரச' ஊடகவியலாளர் முஹமட் ரஸ்மி மஹ்ரூப் என்பவரும் கொல்லப்பட்டார்.

எனினும், அவரது வீடியோ கமெரா இந்தச் சம்பவத்தில் பலத்த சேதமடையவில்லை. இந்தக் கமெராவிலிருந்த ஒளிப்பதிவு நாடாவை கைப்பற்றிய பொலிஸார் அதனைத் தீவிர ஆய்வுக்குட்படுத்தினர்.குண்டுத் தாக்குதலில் குண்டுதாரியின் உடல் சிதறியதுடன் தலையும் அடையாளம் காண முடியாதளவுக்கு சேதமடைந்தது.

எனினும், வீடியோ ஒளிப்பதிவை ஆராய்ந்தபோது அந்தக் குண்டுதாரி எனக் கருதப்படுபவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் காயமடைந்து ஆஸ்பத்திரியிலிருப்போரின் வாக்குமூலத்தின்படி அது உறுதியாகியுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயந்த கமகே தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: