திங்கள், 13 அக்டோபர், 2008

பாலையடிவெட்டையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது மின்னல் வேக தாக்குதல்: மூவர் பலி இருவர் காயம்



மட்டக்களப்பு மாவட்டம் பாலையடிவெட்டை பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய மின்னல் வேக தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பாலையடிவெட்டை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து வெல்லாவெளி நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் தும்பாலை பாலைத்தை அண்மித்த போது வழிமறித்த விடுதலைப் புலிகள் மின்னல் வேக அதிரடித்தாக்குதலை நடத்தினர்.

இதில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர்.

ஏனைய படையினர் காயமடைந்தவர்களையும் தூக்கிக்கொண்டு தப்பிச்சென்றனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரிலிருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில் வெல்லாவெளி பிரதேசம் உள்ளது.

கருத்துகள் இல்லை: