வெள்ளி, 10 அக்டோபர், 2008

நாளை சர்வகட்சி மாநாடு: மோதல் ஆரம்பித்த பின்னர் ஏன் மாநாடு- ஐ.தே.க. கேள்வி

சர்வகட்சி மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் ஜனாதிபதியின் செயலாளர் வீரதுங்கவால் கையெழுத்திடப்பட்டு அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் இந்த அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதா�
� ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலரிமாளிகையில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் ஒரு கட்சியிலிருந்து நால்வரைப் பிரதிநிதித்துவப்படுத்துமாற�
� அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுவே இந்த வருடம் நடத்தப்படும் முதலாவது சர்வகட்சி மாநாடு. எனினும், அரசாங்கத்தால் நடத்தப்படும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லையென தமது கட்சி ஏற்கனவே முடிவெடித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அன்றையதினம் உயிரிழந்த மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவின் இறுதிக்கிரியைகள் நடைபெறுவதால் அனைத்து உறுப்பினர்களும் அதில் கலந்துகொண்டிருப்பதார்கள் என அவர் குறிப்பிட்டார்.

மோதலில் வெற்றிபெறுவதெனத் தீர்மானித்த பின்னர் ஏன் அரசாங்கம் இவ்வாறு சர்வகட்சி மாநாட்டை நடத்துகிறது என திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்படாத விடயங்கள் சர்வகட்சி மாநாட்டில் கூடி ஆராயப்படுமெனவும், அதில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல்திட்ட யோசனைகள் குறித்து அரசாங்கத்தின் சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை: