வெள்ளி, 10 அக்டோபர், 2008

ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எவ்வித சலுகைகளும் இல்லை – மகிந்த:



தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் எதுவுமில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களைக் களைந்து சரணடைந்தாலும் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாதென பிரபல சர்வதேச தெலைக்காட்சி சேவைக்கு அளித்த செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களை களைவதற்கு விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னரே அரசியல் ரீதியான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புலிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட அனைத்து அரசாங்கங்களும் தோல்வியைத் தழுவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதங்களை களைந்து, அரசாங்கத்திடம் சரணடையும் சந்தர்ப்பம் இன்னமும் புலிகளுக்கு காணப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: