திங்கள், 13 அக்டோபர், 2008

வடகொரியா விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவிப்பு



வடகொரியாவை பயங்கரவாதத்திற்கு உதவியளிக்கும் நாடு என்ற தமது பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்குவதற்குத் தீர்மானித்துள்ள நிலையில் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு வடகொரியா, தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட்ட பல உலக இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.
"

இது தொடர்பாக ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை பயங்கரவாத்திற்கு எதிரான அமைப்பு அமரிக்க காங்கிரஸ_க்கு சமர்ப்பித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினர் வடகொரியாவின் இரண்டு ஆயுதக்கப்பல்களை தாக்கிய சம்பவத்தையும் பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பு இதற்காக சுட்டிக்காட்டியுள்ளது. இதனை ஜப்பானின் சங்கேய் சிம்பம் என்ற செய்திதாளும் பிரசுரித்திருந்ததாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: