வெள்ளி, 10 அக்டோபர், 2008

இலங்கையின் நன்மதிப்பை சீர்குலைக்க ரொபர்ட் ஏவன்ஸ் சூழ்ச்சி - இலங்கை குற்றம் சாட்டு:



ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் இலங்கை அரசாங்கத்திற்கு காணப்படும் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஏவன்ஸ் செயற்பட்டு வருவதாக இலங்கை குற்றம் சாட்டியுள்ளது.

ரொபர்ட் ஏவன்ஸ் தலைமையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பாராளுமன்றக் குழுவினர் உண்மைக்குப் புறம்பான தவகல்களை வெளியிட்டிருப்பதாக ஒன்றிய பாராளுமன்றக் குழுவின் இலங்கைப் பிரதிநிதி ரவிந்த ஆசிரியசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சாதகமான விடயங்கள் மூடிமறைக்கப்பட்டும், பாதகமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவ�
�ம் தெரிவிக்கப்படுகிறது.

ரொபர்ட் ஏவன்ஸ் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கும் யுத்தத்தை தடுப்பதற்கான மறைமுக முயற்சிகளாகவே இவை நோக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தை ஓர் ஆயுதமாக பயன்படுத்த முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: