| கிளிநொச்சி பொதுமருத்துவமனையின் இரண்டு நோயாளர் காவு வாகனங்கள் நோயாளர்களுடன் சென்றபோதும் அவை வவுனியாவை சென்றடையவில்லை. |
இரண்டு நோயாளர் காவு வாகனங்களிலும் 11 நோயாளர்கள் புதுக்குடியிருப்பு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு அலுவலகம் வரை சென்றன. அங்கிருந்து வவுனியா செல்ல அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் உதவி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நோயாளர் காவு வாகனங்களில் எட்டு மாதங்களில் பிறந்த குழந்தை உள்ளிட்ட நோயாளர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில் அந்த வாகனங்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்று தெரியவில்லை. இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா சென்றடைய வேண்டிய நோயாளர் காவு வாகனங்கள் வவுனியா செல்ல அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவின் உதவிகள் கிடைக்காததால் நோயுற்ற 12 நாள் குழந்தை ஒன்று அடுத்த நாள் சனிக்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
புதன், 15 அக்டோபர், 2008
கிளிநொச்சியின் இரண்டு நோயாளர் காவு வாகனங்களின் கதி என்ன?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக