ஆனால் ஷாரூக்கின் அப்ரோச் பிடிக்காமல் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்த்துக் கொண்டு அந்தப் படத்தை உலக அளாவிட பிரமாண்டப் படமாகத் தயாரித்து வருகிறார். அந்தக் கோபத்தில் ரோபோ எனும் பெயர் அமையுமாறு 9 படத் தலைப்புகளைப் பதிவு செய்து ஷங்கரைப் பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஷாரூக்.
இப்போது ரித்திக் ரோஷன் நடித்த க்ருஷ் பாணியில் ஒரு சூப்பர் ஹீரோ பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்துக்குப் பெயர் 'ரா.1' (Ra.1) எனப் பெயரிட்டுள்ளனர். கிட்டத்தட்ட ரோபோவை மையமாகக் கொண்ட கதைதானாம் இதுவும்.
அபினவ் சின்ஹா இயக்கும் இப்படத்தைத் தயாரிப்பவர் மட்டுமல்ல, படத்தின் திரைக்கதை முழுவதையும் எழுதியிருப்பவரும் ஷாரூக்தான்.
விரைவில் தொடங்கும் இந்தப் படத்துக்கு தோராயமாக ரூ.100 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரஜினியின் ரோபோ வருவதற்கு முன் இந்த படத்தை முடித்துவிடுமாறு இயக்குநரிடம் கூறியுள்ளாராம் ஷாரூக்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக