| வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துப்பொருட்களை அனுப்பும் விடயத்தில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுக்கும் இடயையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. |
பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்பதனால் இடம்பெயர்ந்த மக்களுக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தபோதும் இன்னமும் அனுப்பி வைக்கப்படவில்லை என உள்ளுர் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பில் உள்ள தலைமையக பிரதிநிதிகள் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த விடயத்தில் தலையிட வேண்டாம் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பின் அனுமதியுடனேயே எதனையும் செய்ய முடியும் எனக் கூறப்பட்டதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, குறிப்பிட்ட சில மருந்துப் பொருட்களை மாத்திரமே கொண்டு செல்ல முடியும் எனவும் மேலதிகமாக தேவைப்படும் மருந்துப் பொருட்களை அரசாங்கம் அனுப்பிவைக்கும் எனவும் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளினால் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. |
புதன், 15 அக்டோபர், 2008
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் சிறிலங்கா சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள் இடையே முறுகல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக