* இம்ரான் கூறுகிறார் கிரிக்கெட் வீரர்களை தீவிரவாதிகள் ஒருபோதும் தாக்கமாட்டார்கள் என்று பாகிஸ்தான் முன்னாள் கப்டன் இம்ரான்கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகளவில் நடைபெற்று வருவதையடுத்து அந்நாட்டுக்கு வருகை தர அவுஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் அணிகள் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் கப்டன் இம்ரான்கான் கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் ஒருபோதும் தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
அவ்வாறு செய்தால் மக்கள் ஆதரவு கிடைக்காது என்று அவர்களுக்குத் தெரியும் என்றும் எனவே, சர்வதேச வீரர்கள் எந்த அச்சமுமின்றி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக