| சிறிலங்கா அரசாங்கத்தின் 2009 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம் 981 பில்லியன் ரூபா என குறைநிரப்பு பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
மேலதிகமாக 850 பில்லியன் ரூபா வெளிநாட்டு கடன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரேரணையின் மதிப்பீட்டில் கணிப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்ற சாபநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டாரா தலைமையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 9:30 நிமிடத்துக்கு கூடியது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேள்வி நேரம் முடிவடைந்ததும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா அடுத்த ஆண்டுக்கான செலவீன மதிப்பீட்டு குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு 17 ஆயிரத்து 706 கோடியே 39 ஆயிரம், கல்வி அமைச்சுக்கு 2,725 கோடியே 92 லட்சத்து 64 ஆயிரம் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு அமைச்சுகளுக்கும் செலவீன மதிப்பீட்டுத்தொகை பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, அரசாங்கத்தின் மொத்த செலவீனத்தில் பாதுகாப்புக்கான நிதி 18 வீதம் என்பது ஏனைய செலவு தொகையை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வரவு-செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் நாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நாடாளுமன்றத்தில் சமாப்பிக்கப்படவுள்ளது. இதற்கிடையில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவீன மதிபீடு மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பாக்கப்படுகின்றது. |
வெள்ளி, 10 அக்டோபர், 2008
சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவீனம் 981 பில்லியன் ரூபா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக