கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவிப் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர். |
பரந்தனில் உள்ள குமரபுரம் மக்கள் குடியிருப்பு மீது இன்று வெள்ளிக்கிழமை காலை 6:25 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. நான்கு தடவை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அப்பாவிப் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர்.
பொதுமக்களின் 30 வீடுகள், கால்நடைகள், பயன்தரு மரங்கள் உட்பட அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டு சுடுகாடு போல் குடியிருப்பு பகுதி காட்சியளிக்கின்றது. பெருமளவிலான மக்கள் பதுங்குகுழிகளில் அடைக்கலம் தேடிக்கொண்டதனால் பாரிய உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. குண்டுத்தாக்குதலில் பரந்தன் குமரபுரத்தைச் சேர்ந்த அருமைநாதன் சந்திராதேவி (வயது 50) கொல்லப்பட்டுள்ளார். குமரபுரத்தைச் சேர்ந்தவர்களான தா.அருமைநாதன் (வயது 52) த.சிவானந்தன் (வயது 39) க.யோகம்மா (வயது 69) அ.அஜிதன் (வயது 12) அ. அச்சிகா (வயது 09) சிறிகாந்தா துவாரகன் (வயது 13) மனோகரன் உசா (வயது 32) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகருக்கு வடக்காக இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் பரந்தன் உள்ளது. |
வெள்ளி, 10 அக்டோபர், 2008
கிளிநொச்சியில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: அப்பாவி பெண் பலி; 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் காயம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பகுதியில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவிப் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக