வெள்ளி, 10 அக்டோபர், 2008

சிறிலங்கா படையினரின் எண்ணிக்கையை இரண்டு லட்சமாக அதிகரிக்க மகிந்த அனுமதி



சிறிலங்கா படையினரின் எண்ணிக்கையை இரண்டு லட்சமாக அதிகரிப்பதற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படை உயரதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா இராணுவத்தின் தற்போதைய மொத்த எண்ணிக்கை 160,000 என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை 40 ஆயிரத்தினால் உயர்த்துமாறு சமீபத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தில் படை அதிகாரிகளினால் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன் போரிடும் திறன் கொண்ட படைப்பிரிவு மற்றும் நிர்வாக படைப் பரிவு என புதிய படையணிகளை மேலதிகமாக உருவாக்க வேண்டிய அவசியம் குறித்தும் படை அதிகாரிகள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசணை வழங்கியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் அடிப்படையிலேயே அரச தலைவர் மகிந்த ராஜபக்ச படைத்தரப்புக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: