வியாழன், 9 அக்டோபர், 2008

மகே‌ஸ்வரி மது கைடபரை வதம் செய்கிறாள்





க‌ன்‌னி ரா‌சி‌யி‌ல் சூ‌ரிய‌ன் ச‌ஞ்ச‌ரி‌க்கு‌‌ம்போது இ‌ல்ல‌த்‌தி‌ல் அ‌ம்‌பிகை வ‌ழிபா‌ட்டை நட‌த்‌தினா‌ல் இ‌ல்ல‌த்‌தி‌ல் ந‌ல்லது நட‌க்கு‌ம் எ‌ன்பது ந‌ம்‌பி‌க்கை.

அத‌ன்படி ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒ‌வ்வொரு அ‌ம்‌பிகை‌க்கு உக‌ந்த நாளாக கருத‌ப்படு‌கிறது.

இ‌ன்று மகே‌‌ஸ்வ‌ரி‌க்கு உக‌ந்த நா‌ள்


கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது. மகா விஷ்ணு ஒரு சிறு குழந்தையாக சேஷசயனத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க, மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் எக்களிப்பில் திருமாலின் உந்தியிலிருந்து உதித்த பிரமனுடன் போர் புரியத் தொடங்கினர்.

பிரமன் பராசக்தியை மகாதேவி மகாமாயை, மகா புத்தி, மகாவித்யை என்றெல்லாம் போற்றித் துதித்து இவ்விரு அசுரர்களை மயக்கி, உலகைக் காத்தருள வேண்டினார். அம்பிகை மகாவிஷ்ணுவின் யோக நித்திரையிலிருந்து வெளிப்பட்டு மது கைடபர்கள் இருவரையும் தம் தொடை மீதே வைத்து தனது சக்ராயுதத்தால் மகாவிஷ்ணு வதம் செய்யக் காரணமாக இருந்தார்.

மாலை 6 ம‌ணி முத‌ல் இரவு 8 ம‌ணி‌க்கு‌ள் அ‌ம்‌பிகை‌க்கு பூஜை செ‌ய்ய ‌சிற‌ந்த நேரமாகு‌ம்.

இ‌ன்று செ‌வ்வா‌ய்‌க்‌கிழமை எ‌ன்பதா‌ல் அ‌ம்‌பிகை‌க்கு ‌சிவ‌ப்பு ‌நிற ஆடை அ‌ணி‌வி‌த்த‌ல் ‌சிற‌ப்பு. செ‌ந்தாமரை, வெ‌ண்தாமரை, ம‌ல்‌லிகை மல‌ர்களா‌ல் க‌ட்ட‌ப்ப‌ட்ட மாலையை அ‌ணி‌வி‌த்து அழகுபடு‌த்தலா‌ம்.

நைவே‌த்‌தியமாக வெ‌‌ண் பொ‌ங்க‌ல் படை‌க்க வே‌ண்டு‌ம்.

கருத்துகள் இல்லை: