புதன், 8 அக்டோபர், 2008

இலங்கைக்கு இந்திய அரசின் இரகசிய உதவி வெட்டவெளிச்சம்'




இலங்கை தமிழர்களை காப்பாற்ற முதல்வர் களம் இறங்கி போராடவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது;

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்ற முகமூடியை அணிந்துகொண்டே இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைக்கு இந்திய அரசு இரகசியமாக உதவி வருவது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தனித்தனியாக போராடுவது பயனற்றது.

மத்திய அரசு, தமிழ் இன விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை இவ்வளவு காலம் தட்டிக் கேட்காமல் இருந்து விட்டு இப்போது மக்களை தந்தி அடியுங்கள் என்பதும், பொதுக்கூட்டம் நடத்துகிறேன் என்பதும் பயன்பாட்டுக்கு உதவாத சம்பிரதாயங்களாகவே தோன்றுகின்றது.

எனவே முதல்வர் உடனடியாக மத்திய அரசை நிர்ப்பந்தித்து இலங்கையில் நடைபெறும் இராணுவ தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும், சுமுகமான பேச்சுவார்த்தையை இந்திய அரசே முன்னின்று தொடங்கவும், இலங்கை அரசை கடுமையாக வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அது சாத்தியமில்லை என்றால் மத்திய அரசுக்கு ஆதரவை தி.மு.க. விலக்கிக்கொள்வது மட்டுமே தமிழ் இனத்தின் வாழ்வுக்கு தி.மு.க. அனுப்புகிற சிறந்த தந்தியாக இருக்கும். இலங்கைத் தமிழர்களை காப்பற்ற முதல்வர் களம் இறங்கி போராட முன் வந்தால் அதற்கு சமத்துவ மக்கள் கட்சி துணை நிற்கும். இதற்காக அனைத்து மக்கள் கட்சிகளின் ஆதரவையும் திரட்டி நான் களம் இறங்குவேன். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: