| |
நடிகர் மாதவனின் தந்தை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் முன்னணி ஹீரோ சத்யராஜ்!
ஏகப்பட்ட பாராட்டுக்களையும், விருதுகளையும் வென்ற ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படத்துக்குப் பின் தங்கர் பச்சான் இயக்கும் படம் புதிய படத்தில்தான் இந்த இரு நாயகர்களும் கலக்க வருகிறார்கள்.
எத்தனையோ படங்களில் பவர்புல் வில்லன், ஹீரோவின் தந்தை என அதிக சம்பளத்துடன் ஆஃபர் வந்தாலும், தன் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக இருந்தவர் சத்யராஜ்.
ஆனால் தங்கர் பச்சான் தன்னிடம் சொன்ன கதையைக் கேட்டதும், மாதவனின் தந்தையாக நடிக்க ஒப்புக் கொண்ட சத்யராஜ், எந்த தேதியில் வேண்டுமென்றாலும் வந்து நடித்துக் கொடுப்பதாகக் கூறிவிட்டாராம்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் பெயரிடப்படாத படத்தில் நடிப்பதன் மூலம் தனக்கு கூடுதல் அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறார் மாதவன்.
இம்மாத இறுதியில் படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடவிருப்பதாக இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்தார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக