கனடாவில் நேற்று சனிக்கிழமை தொடங்கியுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது. |
நேற்று தொடங்கிய இந்தப் போராட்டத்தில் கனடா வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் பங்குபற்றினர். இன்று ஞாயிற்றுக்கிழமையும், நாளை திங்கட்கிழமையும் இந்தப் போட்டிகள் நடைபெறவிருப்பதால் ஆர்ப்பாட்டப் போராட்டமும் தொடர்ந்து இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
City இல் Dufferin & Blumington சந்திப்பிற்கு அருகில் உள்ள திடலிலேயே இந்த துடுப்பாட்டப் போட்டி தொடங்கியிருக்கின்றது. தமிழ் மக்களை குண்டு வீசியும் பட்டினிச்சாவாலும் பறி கொடுத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் அவலங்களை மூடிமறைத்து விளையாட்டுக்களிலும் களியாட்டங்களிலும் சிறந்த தேசம் என தன் தேசத்தை காட்டுமுகமாக தன் கோரமுகத்தை முகத்திரையிட்டு மறைக்க முயற்சிக்கும் சிறிலங்கா அரசின் முகத்திரையை கிழிக்கு முகமாக இந்த திடலின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்ட போரட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கனடா வாழ் தமிழ்த் தேசிய உறவுகளையும் பங்கேற்குமாறு கனடா தமிழ் மகளிர் அமைப்பினரும், தமிழ் இளையோர் அமைப்பினரும் கேட்டுக்கொண்டுள்ளனர். போக்குவரத்து வசதிகள் தேவைப்படுபவர்களுக்கு ஒழுங்குகள் செய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் பிற்பகல் 12:00 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறும் இடம்: Maple Creek Cricket Club, 13811 Dufferin St. King, York Region Municipality மேலதிக தொடர்புகளுக்கு: மார்க்கம்: 905-554-2496 மிசிசாகா: 416-627-8644 ஸ்காபுரோ: 416-828-7116 ரொரன்ரோ: 416-956-1338 |
திங்கள், 13 அக்டோபர், 2008
சிறிலங்கா துடுப்பாட்டக்குழுவுக்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கனடாவில் நேற்று சனிக்கிழமை தொடங்கியுள்ள துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றும் சிறிலங்கா குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றுள்ளது.












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக