திங்கள், 13 அக்டோபர், 2008

நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொன்றவருக்கு பதவியா?: பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் கேள்வி



நாடாளுமன்ற உறுப்பினர்களை கொன்றவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியா? எனக் கேள்வி எழுப்பியுள்ள பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம், இதுதான் அந்நாட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினது ஜனநாயகமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையப் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் இன்று சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'பார்லீமென்ட்' என்று ஆங்கிலத்தில் கூறப்படும் சொற்பதத்தை தமிழில் 'பாரளுமன்றம்' என்று கூறுவார்கள். இந்த பார்லீமென்ட் என்ற ஆங்கிலச் சொல் பிரெஞ்சு மொழியில் 'பார்ல்' என்ற சொற்பதத்திலிருந்து, அதாவது 'பேசு அல்லது கதை' என்ற கருத்தைகொண்ட அடிப்படையிலேயே 'பார்லீ + மென்ட்' என்ற சொற்பதம் உருவானது. இது தற்பொழுது உலகாளாவிய ரீதியில் பாவனையில் உள்ளது.

உலகில் பெரும்பலான நாடுகளில் குறிப்பிட்ட சில நபர்கள் ஒன்று கூடி 'பாரளுமன்றம்' என்ற மண்டபத்தில் தொடர்ந்து தமது நாட்டின் நிலைமைகளை கதைத்து, உரையாடி, விவாதித்து அதற்கேற்ற முறைகளில் சட்டங்களையும் நடைமுறைகளையும் உருவாக்குவார்கள். இவர்கள் கட்டாயமாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவர்கள் இங்கு கதைத்து உரையாடும் காரணத்தினால் இதை 'பார்லீமென்ட்' என்று கூறுகிறார்கள்.

உலகில் பல நாடுகளில் இந்த நடைமுறை உண்மையில் சாத்வீகமாக இல்லாத பொழுதிலும், இதை 'பார்லீமென்ட்' என்றே அழைக்கிறார்கள். இந்த ரீதியில் சிறிலங்காவில், 1978 ஆம் அரசியல் யாப்பின் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி நியமானத்தை தொடர்ந்து, சிறிலங்காவின் பாரளுமன்றத்தின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகிறது.

சிறிலங்காவில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதி சகல அதிகாரங்களை கொண்டதுடன் சிறிலங்காவின் பாரளுமன்றத்தினை கூட்டவும் கலைக்கவும் அதிகாரம் கொண்டதுடன் தான் விரும்பிய பாரளுமன்ற உறுப்பினர்களை அரசியல் யாப்பின் வரையறைகளுக்கு இணங்காது நியமிக்கவும் அதிகாரம் கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் 1978 ஆம் அரசியல் யாப்பை உருவாக்கிய முன்னாள் ஜனதிபதி காலம் சென்ற ஜே. ஆர். ஜெயவர்த்தனா மிகச் சுருக்கமாக இவ் அதிகாரம் பற்றி கூறியதாவது, "ஓர் ஆணை பெண்ணாக்கவோ அல்லது பெண்ணை ஆணாக்கவோ" இந்த அதிகாரத்தினால் முடியாதே தவிர, மிகுதி யாவும் செய்ய முடியுமென கூறினார்.

சிறிலங்காவை பொறுத்தவரையில், பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு 'பாரளுமன்றம்' பற்றி எதுவேமே தெரியதவர்களாக உள்ளார்கள். முன்பு, ஐந்து தடவைக்கு ஒரு தடவை வாக்குச் சாலைகளுக்கு சென்றவர்கள், எதற்காக யாருக்காக வாக்கு அளிக்கிறோம் என்பதை அறியாதே செய்தார்கள். மிக அண்மைகாலமாக முன்பு போல் அல்லாது, பல தடவைகள் சிறிலங்காவில் வாக்களிப்பு இடம்பெற்றாலும், பெரும்பான்மையான சாதாரண மக்கள் முன்பு போன்று எதையும் அறியாதே செய்கிறார்கள்.

இலங்கைத் தீவு வாழ் தமிழ் மக்களை பொறுத்த வரையில் சிறிலங்கா பாரளுமன்றத்தினால் இவர்களது விருப்புகளுக்கும் அரசியல் அபிலாசைகளுக்கும் மாறாக, எண்ணிக்கையில் பெரும்பான்மையா சிங்களவர்களினால் நிறைவேற்றப்பட்ட சட்ட திட்டங்கள் எண்ணில் அடங்காது. நாம் இதை இங்கு பட்டியலிட்டு காட்டவேண்டிய அவசியம் இல்லையென நம்புகிறோம்.

1977, 2002, 2004 தேர்தல் முடிவுகள் மூடிமறைக்கப்பட்டுள்ளன!

தற்பொழுது தமது சர்வதேச பிரச்சாரத்திற்காக உலகை வலம் வரும் ஐனதிபதி மகிந்த ராஜபக்ச முதல் சிறிலங்காவின் அமைச்சார்கள், தூதுவர்கள,; அத்துடன் இவர்களுடன் பணத்திற்காக சேவகம் செய்யும் நபர்களும் பேசும்; 'ஜனநாயகம்' என்னவென்றால், தமக்கு எது சதகமாகவுள்ளதோ, அதையே 'ஜனநாயகமாக’ கொள்கின்றனர். இதையே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஜனநாயகமாக பரப்புரை செய்கின்றனர். அவர்கள் கூறும் ஜனநாயகத்தை தாம் எப்படியாக பெற்று கொண்டோம் என்பது பற்றி அவர்கள் ஒருபொழுதும் சிந்தித்து வெட்கப்பட்டதே கிடையாது.

வடக்கு-கிழக்கு வாழ் மக்கள் சுதந்திரமாக வாக்களித்த 1977, 2002, 2004 தேர்தல் முடிவுகள் யாவும் திட்டமிடப்பட்டு சிறிலங்காவின் பௌத்த இனவாத அரசுகளினால் முடிமறைக்கப்பட்டது மட்டுமல்லாது, அண்மைக்காலங்களில் துப்பாக்கி முனைகளில் வன்முறைகள், கள்ள வாக்கெடுப்புக்களினால் பெறப்பட்ட தேர்தல் முடிவுகளை, ஜனநாயகததின் தோற்றமாக உலகிற்கு காண்பிக்கப்படுகிறது. இது தான் மகிந்தவின் ஜனநாயகமா?

தற்போது மகிந்தவின் ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒட்டுக்குழுவொன்றின் தலைவரான கருணா என்பவரை பாரளுமன்றத்தில் நியமன உறுப்பினராக நியமித்து விட்டு, அதை சிறிலங்காவில் ஜனநாயம் வலுபெற்றுள்ளதாக உலகிற்கு அரசு அறிவிப்பது மிகவும் கெவலாமான செயலாகும்.

சிறிலங்காவின் எதிர்க் கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்க, இதை ஒர் 'அவமானமாக' தான் கருதுவதாக கூறியுள்ளார். சிங்களத் தீவிரவாதக் கட்சியான ஜே.வி.பி, இந்த நியமனம் தவறனதெனவும், தமது காட்சிக்கும் ஐனதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் கட்சிக்கும் இடையில் உள்ள புரிந்துணர்வு ஓப்பந்தத்தின் அடிப்படையில் தமக்கே இப் பாரளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கப்படிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வழக்கு ஓன்று தாக்கல் செய்துள்ளார்கள்.

ஆனால் உண்மையை கூறுவதானால், எந்தவொரு அரசியல் கட்சியாதல் பாரளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட ஒட்டுக்குழு தலைவர் -பல பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை மனிதாபிமான செயற்பாட்டாளரின் கொலைகள் உட்பட, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர் ஒருவரின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் மட்டுமல்லாது, இவர் ஏற்கனவே போலிக் கடவுச்சீட்டு விவகாரத்தில் பிரித்தானியாவில், ஆறு மாதம் சிறை தண்டனையை அனுபவித்தவர் என்பதை காண்பித்து, சட்ட ரீதியாக இவரது நியமானத்தை எதிர்க்க முன்வரவில்லை.

ஆனால் சில பத்திரிகைகள், சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள், இவ் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், இவ் ஒட்டுக்குழுத் தலைவர் மீது கீறிமினல் குற்றங்களுக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கூறியுள்ளனா. ஆனால் இவரை குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கு பதிலாக, பாரளுமன்றத்தில் அங்கத்தவராக நியமித்துள்ளது ஐனதிபதி ராஜபக்சவின் அரசு. இது தான் இவர்கள் கூறும் ஜனநாயகமா?

ஒட்டுக்குழுத் தலைவர் எதற்காக பாரளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்?

இவ் ஒட்டுக்குழுத் தலைவர் எதற்காக பாரளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார் என்பது பலருக்கும் புரியாத புதிராக இன்றுள்ளது? இதற்கு சில காரணங்களை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

ஓன்று - இவரும் இவர் ர்ந்த மற்றைய ஒட்டுக்குழு உறுப்பினரும், சிறிலங்கா இராணுவத்துடன் நெருங்கி வேலை செய்வதை சர்வதேச ரீதியாக மூடி மறைப்பதற்கும்.

இரண்டு - பிரித்தானியவிலிருந்து இவர் திரும்பியதும் சில ஊடகங்களுக்கு கூறியது என்னவெனில், "தான் ஏறக்குறைய இரு வருடங்களாக, தனது மனைவி பிள்ளைகளை காணவில்லையாம். இதனாலேயே தான் பிரித்தானியாவுக்கு போலி இராஜதந்திர கடவைச்சீட்டில் சென்றதாக கூறியுள்ளார்". இக்கூற்று உண்மையானால், இவர் மீண்டும் சட்ட ரீதியான இராஜதந்திர கடவுச்சீட்டுடன் பிரித்தானியா செல்வதற்கான அத்திவாரமாக், நாம் இவ் பாரளுமன்ற உறுப்பினர் நியமனத்தை கொள்ளலாம்.

மூன்று - பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர் பலர் தமது தொகுதிகளுக்கு செல்லாது, பாரளுமன்றக் கூட்டங்களில் மட்டுமே சமூகமளித்து வருகின்றனர். ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட புதிய பாரளுமன்ற உறுப்பினர் பற்றி மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். பாரளுமன்றத்துக்குள்ளேயே இவர்களுக்கு இவரினால் ஆபத்துக்கள் ஏற்படலாம்.

நான்கு - ஐனதிபதி மகிந்த ராஜபக்சவின் புதிய பிரச்சினை என்னவெனில், தன்னுடன் முன்பு தமது சர்வதேச பிரச்சாரத்திற்காக உலகை வலம் வந்த மற்றைய ஒட்டுக்குழு தலைவரான, டக்ளஸ் தேவனந்தாவை தற்பொழுது சில முக்கிய நாடுகளுக்கு கூட்டிச் செல்ல முடியாது சில சட்டப் பிரச்சினைகள் உருவாகியுள்ளனா. இந்த ரீதியில், புதிய நியமான உறுப்பினருடன், எதிர்காலத்தில் தனது சர்வதேச பிரச்சாரத்தை உலக நாடுகளில் மேற்கொள்ள ஐனதிபதி திட்டமிட்டிருக்லாம்.

ஐனதிபதியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்

செப்ரெம்பர் 7 ஆம் திகதி பாரளுமன்றத்தில், இவ் ஒட்டுக்குழு உறுப்பினர், சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட சமயம் - ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி., மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பாரளுமன்றத்தில் சமூகமளித்து இருக்கவிலலையென செய்திகள் கூறுகின்றன.

இவர்கள் உண்மையில், இவர் சத்தியப்பிரமாணம் எடுப்பதை பகிஸ்கரிப்பதற்காக செய்திருந்தால், இவர்கள் யாவரும் ஒன்று திரண்டு, ஐனதிபதி மகிந்த ராஜபக்சவை, அரசியல் யாப்பு சட்டம் அதிகாரம் ஏழு - யாப்பு 38 - பந்தி ஓன்று (அ) வின் கீழ் ஜனதிபதியின் அதிகார துஸ்ப்பிரயோகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை இவ்விடயத்தை உயர் நீதிமன்றத்திற்கும் எடுத்துச்சொல்ல வேண்டும்.

சிறிலங்காவின் 1978 ஆம் அரசியல் யாப்பின் கீழ், ஓர் பாரளுமன்ற உறுப்பினர் மீதான சட்ட நடவடிக்கைகள் யாவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனதிபதியின் மன்னிப்பு மூலம், வலுவிழக்கச் செய்கின்றனா. இந்த ரீதியில் நியமிக்கப்பட்ட பாரளுமன்ற உறுப்பினர் விவகாரத்தில், ஒர் கொலையாளிக்கு மன்னிப்பு கொடுத்து, அவரை பாரளுமன்ற உறுப்பினராக நியமித்த ஜனாதிபதி மீது நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம்.

ஜனநாயகத்திலும் நல்ல அரசிலும் அக்றை கொண்டுள்ள ஒவ்வொரு பாரளுமன்ற உறுப்பினரும் செய்ய வேண்டிய தலையாய கடமை இதுவாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: