திங்கள், 13 அக்டோபர், 2008

புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்- 51% - "இந்தியன் எக்ஸ்பிரஸ்" கருத்துக் கணிப்பு



தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடையை நீக்க வேண்டும் என்று 51 விழுக்காடு தமிழர்கள், இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான "இந்தியன் எக்ஸ்பிரசின்" ஞாயிறு பதிப்பு நடத்திய (சண்டே எக்ஸ்பிரஸ்) கருத்துக்கணிப்பில் வாக்களித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பு விவரம்:

நான் மகிழ்ச்சியடைவேன்....

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால்..... 8 விழுக்காடு

மேலதிகமாக ஈழத் தமிழர் ஏதிலியர்களுக்கு தமிழ்நாடு அடைக்கலம் கொடுத்தால்..... 22 விழுக்காடு

இந்த பிரச்சினையில் எதுவும் செய்யக்கூடாது- நான் ஆதரிக்கமாட்டேன் - 16 விழுக்காடு

ஊடகங்களைப் பொறுத்த வரைக்கும் ஈழத் தமிழர் பிரச்சினை ஓ.கே. ஆனால் எனக்கு போதுமான ஆர்வமில்லை - 14 விழுக்காடு

தமிழீழத்துக்கு நிதியும் பொருள் உதவியும் வழங்க வேண்டும் - 40 விழுக்காடு

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நமது அரசியல்வாதிகள் என்ன செய்ய வேண்டும்?

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முழு அடைப்பு நடத்த வேண்டும் - 18 விழுக்காடு

வெற்றி பெறும்வரை சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்த வேண்டும் - 12 விழுக்காடு

கூடுதல் வரி வசூலித்தால் நான் மகிழ்ச்சியாக தருவேன் - 10 விழுக்காடு

சிறிலங்கா படைத்தரப்புக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி வழங்கும் மத்திய அரசாங்கத்துடனான உறவை தி.மு.க. துண்டிக்க வேண்டும் - 34 விழுக்காடு

புலிகளை சிறிலங்கா தோற்கடித்து பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்ட பின்னர்

ராஜீவ் வழக்கு விசாரணைக்காக பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாம் கோரவேண்டும் - 6 விழுக்காடு

தமிழ்நாட்டில் பிரபாகரனுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் - 23 விழுக்காடு

ஐ.நா. தலையிட வலியுறுத்த வேண்டும் - 25 விழுக்காடு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமா?

நீக்க வேண்டும் - 51 விழுக்காடு

இப்போதில்லை - 15 விழுக்காடு

எப்போதும் நீக்கக்கூடாது - 8 விழுக்காடு

தெரியவில்லை- சொல்ல இயலவில்லை - 26 விழுக்காடு

விடுதலைப் புலிகள்

ஒரு பயங்கரவாத இயக்கம் - 12 விழுக்காடு

விடுதலைப் போராட்ட வீரர்கள் - 30 விழுக்காடு

தமிழர் பிரச்சனைக்காக செயற்படுபவர்கள் - 22 விழுக்காடு

இலங்கைத் தமிழர்களின் ஒரே- உண்மையான பிரதிநிதி - 36 விழுக்காடு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: