| தேசிய ரூபவாஹினி மற்றும் சுயாதீனத் தொலைக்காட்சி ஆகிய அரசாங்க தொலைக்காட்சி அலைவரிசைகளில் உயர் நீதிமன்றத் தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அதிஉயர் பீடமாக கருதப்படும் நீதிமன்றக் கட்டமைப்பை அவமரியாதைக்கு உட்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்தமைக்காக குறித்த தொலைக்காட்சி சேவைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது. குறித்த தொலைக்காட்சி அலைவரிசைகளின் பணிப்பாளர்கள், குறித்த நிகழ்ச்சியைத் தயாரித்து ஒளிபரப்புச் செய்த தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதேவேளை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பான எழுத்து மூல உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் வீதித் தடைகள் அகற்றப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. காலி வீதியில் அமைந்துள்ள வீதித்தடைளை உடனடியாக அகற்றுமாறு உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. |
புதன், 1 அக்டோபர், 2008
நீதிமன்ற உத்தரவை விமர்சித்த அரசாங்கத் தொலைக்காட்சிகளுக்கு எதிராக வழக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக