புதன், 1 அக்டோபர், 2008

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சந்திரநேருவின் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவின் வீட்டின் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திருக்கோயில் பிரதேசத்தில் அமைந்துள்ள சந்திரநேருவின் வீட்டின் மீது இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கைக்குண்டுத் தாக்குதல் காரணமாக வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும், சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: