செவ்வாய், 7 அக்டோபர், 2008
மர்மயோகியில் ஷோபனாவும்!
கமல்ஹாசனின் மர்மயோகி படத்தில் ஐந்து முக்கிய நாயகிகள் இடம் பெறுகின்றனர். முக்கிய கேரக்டர்களுக்கும் ஆட்களை பிடித்து விட்டதால் படப்பிடிப்புக்குப் போக கமல் அன் கோ தயாராகி வருகிறது.
மர்மயோகி படத்தின் முதன்மை நாயகியாக திரிஷா நடிக்கவுள்ளார். இவர், கமலின் காதலியாக வருகிறார். அதேபோல ஷ்ரியாவும் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். கமல்ஹாசனின் மனைவியாக இவர் வருகிறார்.
இவர்கள் தவிர முன்னாள் ட்ரீம் கேர்ள் ஹேமமாலினி வில்லத்தனமான ரோலில் வெளுத்துக் கட்ட வருகிறார்.
இந்த நிலையில் இன்னொரு முக்கிய நாயகியும் படத்தில் இணைந்துள்ளார். அவர் ஷோபனா. சங்க காலத்தைச் சேர்ந்த கிளாசிகல் டான்ஸராக இப்படத்தில் ஷோபனா வருகிறார். கமல்ஹாசன் மீது காதல் கொள்பவராக இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்தில் கமல்ஹாசன் 3 கெட்டப்களில் கலக்குகிறார் என்பது தெரியும்தானே.
இந்த நாயகிகள் போக முமைத்கான் சமீபத்தில்தான் இன்னொரு முக்கிய கேரக்டரில் சேர்க்கப்பட்டார். கமல்ஹாசனுடன் ஒருகுத்துப் பாட்டு இவருக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் முக்கிய கேரக்டரிலும் முமைத் அசத்தவுள்ளார்.
இந்த மாதத்தின் 2வது வாரத்தில் மர்மயோகி படப்பிடிப்பு பிரமாண்டமான அளவில் தொடங்குகிறதாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக