உயிரிழந்த இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவுக்கு அரசாங்கம் உரிய மரியாதையை வழங்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உயிரிழந்த ஜானக பெரேரா மற்றும் அவருடைய மனைவியின் பூதவுடல்கள் மக்கள் அஞ்சலிக்காக அநுராதபுரம் எடுத்துச்செல்லப்படுகின்றன.
உலங்குவானூர்தி மூலம் அநுராதபுரத்துக்கு எடுத்துச்செல்வதற்காக இரண்டு பூதவுடல்களும் இரத்மலானை விமானநிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லையெனக் கூறி இரண்டு பூதவுடல்களையும் விமானநிலையத்துக்குள் அனுமதிக்காமல் வீதியோரத்தில் வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.
நண்பகல் வரை இருவரின் பூதவுடல்களை விமானநிலையத்துக்குள் கூட அனுமதிக்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தனர்.
உயர் பதவியிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்த பின்னர் கூட அரசாங்கம் உரிய மரியாதையை வழங்கவில்லையென எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதேவேளை, உயிரிழந்த மேஜர் ஜென்ரல் ஜானக பெரேராவின் பூதவுடலை அநுராதபுரத்துக்கு எடுத்துச்செல்ல உலங்குவானூர்தி வசதிகளைச் செய்துகொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
ஜானக பெரேராவுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நீதிமன்றம் சென்றபோது அவருக்கு அச்சுறுத்தல் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய, ஜானக பெரேராவுக்கு அச்சுறுத்தல் இல்லையெனக் கூறியிருந்ததாகவும், இதனால் நீதிமன்றம் பிழையாக வழிநடத்தப்பட்டிருப்பதாகவும�
� கிரியல்ல இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் குற்றஞ்சாட்டினார்.
நீதிமன்றத்தைப் பிழையாக வழிநடத்தி கோதபாய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக சட்டமா அதிபர் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் லக்ஷ்மன் கிரியல்ல, தவறும் பட்சத்தில் தாம் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறினார்
புதன், 8 அக்டோபர், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக