வெள்ளி, 10 அக்டோபர், 2008

கொழும்பில் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் சடலமாக மீட்பு



இங்குரகொட சந்தியிலிருந்து கடந்த 6ம் திகதி கடத்திச் செல்லப்பட்ட இரண்டு தமிழ் சகோதரர்களின் சடலங்கள் ஜாஎல மற்றும் ராகம பகுதிகளில் மீட்கப்பட்டுள்ளன.
ஜெபமாலை குகனேஷ் மற்றும் ஜெபமாலை சுஜித் என்ற சகோதரர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்கள் இரண்டும் ராகம வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன.

கொலையுண்ட இரண்டு பேரும் கடுமையான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: