சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள புதன் கிரகத்தின் துல்லியமான புகைப்படங்கள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. புதன் கிரகத்தின் மேற்பரப்பு தோற்றப்பாடுகளை எடுத்துக்காட்டும் நான்கு அதி துல்லிய புகைப்படங்களை "மஸெஞ்ஜர்' வெப்தளத்தினூடாக நாசா வெளியிட்டு வைத்துள்ளது.
இதுவரை ஒருபோதும் படமாக்கப்படாத புதன் கிரகத்தின் மத்திய பாகத்தின் தென்பகுதி மற்றும் கிழக்குப் பகுதி என்பனவற்றின் தோற்றப்பாடுகளை மேற்படி புகைப்படங்கள் துல்லியமாக வெளிப்படுத்துவதாக உள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு ஏவப்பட்ட "மஸெஞ்ஜர்' விண்கலமானது மணிக்கு 15000 மைல் வேகத்தில் பயணித்து புதன் கிரகத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விண்கலம் திங்கட்கிழமை புதன் கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து 124 மைல் தொலைவில் நிலைகொண்டே, மேற்படி புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக