| யாழ்ப்பாணத்தில் படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்து மத குருமார்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கையெடுக்குமாறு சமூக அபிவிருத்தி, சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சர்வதேச இந்து மத பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சண்டிலிப்பாய் சீரணி ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானத்தையும் கல்வளை பிள்ளையார் ஆலயத்தையும் சேர்ந்த இந்து குருமார்களும் அறங்காவலர் சபையினரும் அப்பகுதி ஆலயச் சூழலில் நிகழ்ந்த சில அசம்பாவிதம் காரணமாக கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சண்டிலிப்பாய் சீரணி ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானத்தை சேர்ந்த குகானந்த சர்மா, சோமஸ்கந்த சர்மா, நித்தியானந்த சர்மா, கேதீஸ்வர சர்மா, தியாகராசா, நடராஜா, தம்பையா,பரஞ்சோதி, கந்தையா, சற்குணராசா, குணராசா, பிரணவன், பேரிம்பநாதன், பரமநாதன் ஆகியோரையும் கல்வளை பிள்ளையார் ஆலயத்தை சேர்ந்த அமிர்தலிங்கம், பத்மரூ சர்மா, ரேணுகா, ஸ்ரீகந்தராஜா, கந்தர், செல்லையா ஆகியோரையும் படையினர் கைதுசெய்துள்ளனர். இவர்களை விடுவிக்குமாறே சர்வதேச இந்து மதபீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
புதன், 8 அக்டோபர், 2008
யாழ்ப்பாணத்தில் படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்து மதகுருமார்களை விடுவிக்குமாறு வேண்டுகோள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக