திருமணத்தன்று ஓடிப்போகும் மணப்பெண். திருமணம் நின்றதற்கு காரணம் நான்தான் என்று பழியை சுமக்கும் மணமகன். மகள் ஏற்படுத்திய அவமானத்திற்கு பரிகாரமாக, மணமகனுக்கு வேறு பெண் பார்க்கும் மணமகளின் தந்தை.
சரிதான்... சோகத்தை சாத்துக்குடியாக பிழியப் போகிறார்கள் எனறு பார்த்தால்... சர்ப்ரைஸ். ஊட்டி குளிரில் உல்லாசப் பயணம் போய் வந்த ஜில்.
சொந்தமாக தொழில் செய்யும் சேரனுக்கு திருமணம் தள்ளிப்போகிறது. உணர்ச்சி வசப்படும் போது ஏற்படும் திக்குவாயும், சின்ன வயதில் எடுத்துக்கொண்ட மனநல சிகிச்சையும் சேரனின் திருமணத்திற்கு தடையாக இருக்கின்றன. கடைசியில் திருமணத்திற்கு ஒரு பெண் கிடைக்கிறார். அவரும் திருமணத்தன்று காதலனுடன் ஓடிப்போகிறார். சேரனுக்கு ஏற்படும் அவமானத்திற்கு பரிகாரமாக அவருக்கு பெண்தேடுகிறார் மணப்பெண்ணின் தந்தையான மணிவண்ணன்.
கார்த்திகாவை பெண் பார்க்க சேரனை நாகர்கோவிலுக்கு அழைத்து செல்கிறார் மணிவண்ணன். அங்கு தன்னை மணமேடையில் உதறிவிட்டுப்போன ரம்யா நம்பீஸனையும், தன்னை முதல் முதலில் பிடிக்கவில்லை என்று கூறிய விமலா ராமனையும் சந்திக்கிறார் சேரன். அவரது நண்பர் பசுபதி சொல்லும் நவ்யாநாயரும் அங்குதான் இருக்கிறார். சேரன் யாரை திருமணம் செய்தார் என்பதுடன் சுபம். | |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக