வெள்ளி, 10 அக்டோபர், 2008

ஏ 9 வீதியை இலக்கு வைத்து படையினர் எறிகணை வீச்சு



ஏ 9 வீதியை இலக்கு வைத்து இலங்கைப் படையினர் வவுனியாவில் இருந்து எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக வாகனங்கள் யாவும் ஏ 9 வீதியின் கிழக்கு பகுதியின் முல்லைத்தீவு ஊடாக திருப்பி விடப்படுகின்றன.

இந்தநிலையில் நேற்று பேரூந்து ஒன்று எறிகணை வீச்சில் இருந்து மயிரிழையில் தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமையன்று இலங்கையின் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 6 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: