| மணலாற்று களமுனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட ஆறுமுனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறிடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர். லோ உட்பட்ட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. |
மணலாறு களமுனையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளனவில் பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் ஆறுமுனைகளில் சிறிலங்கா படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர். இம்முன்னகர்வுகளுக்கு எதிராக செறிவான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர். இம்முறியடிப்புத் தாக்குதல்களையடுத்து இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கினர். இதில் ஆறு படையினர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். படையினரிடமிருந்து டாங்கி எதிர்ப்பு படைக்கலமான லோ-01 உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. |
புதன், 1 அக்டோபர், 2008
மணலாறில் ஆறுமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 6 படையினர் பலி; 20 பேர் காயம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக