திங்கள், 24 நவம்பர், 2008

சர்வதேச தன்னார்வு நிறுவனங்களின் நிதிகள் கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என கோத்தபாய உத்தரவு



2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிகளில் பணியாற்றிய சர்வதேச தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் தன்னார்வு நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதிகள் குறித்து கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமையத்தின் கீழ் வரும் தன்னார்வு நிறுவனங்களின் கணக்குகளும் இதில் அடக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

படையினரால் மீட்கப்பட்ட ஏ 9 பாதையின் மேற்கு பகுதியில் தன்னார்வு நிறுவனங்களால் எவ்வித அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டுள்ள இரண்டு விமான ஓடு பாதைகளையும் பதுங்கு குழிகளையும் மாத்திரமே காணக்கூடியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தன்னார்வு நிறுவனங்கள் வன்னியில் எவ்வாறான பணிகளை மேற்கொண்டன என்பது கேள்விக்குறிய விடயம் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பெருமளவு நிதியுதவிகளை கொண்டு தன்னார்வாளர்கள் சிலர் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில் ஏ 32 பாதை பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: